Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தும்குருவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

தும்குருவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

By: Nagaraj Sun, 05 Feb 2023 10:25:37 PM

தும்குருவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: நாளை திறந்து வைக்கிறார் பிரதமர்... கர்நாடக மாநிலம் தும்குருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

கர்நாடக சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார்.

அவர் நாளை காலை மாதவாரா அருகே உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைக்கிறார். பிற்பகலில், தும்குரு மாவட்டம், குப்பி தாலுகா, பிடரஹள்ளி கிராமத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

karnataka,prime minister modi,three day round trip ,, கர்நாடகா, பிரதமர் மோடி, 3 நாள், சுற்றுப்பயணம்

இந்த 615 ஏக்கர் தொழிற்சாலைக்கு 2016ல் மோடி அடிக்கல் நாட்டினார் .இந்த 615 ஏக்கர் தொழிற்சாலையில் ரூ.4 லட்சம் கோடி செலவில் அடுத்த 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை கொண்ட 1000 ஹெலிகாப்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

HAL நிறுவனம் முதலில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களையும், அதைத் தொடர்ந்து 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது

Tags :