Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 6 நாட்கள் பயணம்

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 6 நாட்கள் பயணம்

By: Nagaraj Wed, 17 May 2023 10:10:31 AM

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 6 நாட்கள் பயணம்

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு பயணம்... ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ விடுத்த அழைப்பை ஏற்றுள்ள மோடி, வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

pm modi,australia,travel,summit,japan ,பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா, பயணம், உச்சி மாநாடு, ஜப்பான்

இந்த மாநாட்டில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நீடித்த வளம் ஆகியவை குறித்து பேச உள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக சில தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச உள்ளார்.

22ம் தேதி பப்புவா நியூ கினியா செல்லும் மோடி, பின்னர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார். குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் 24ந் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

Tags :
|
|