போப் பிரான்சிஸ் நலமடைய பிரதமர் மோடி வாழ்த்து
By: Nagaraj Sat, 01 Apr 2023 11:33:01 PM
புதுடில்லி: போப் பிரான்சிஸ் குணமடைய பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வாடிகானில் வசித்து வந்த போப் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாசிப்பதில் சிரமம் உள்ள அவர், சுவாச தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் புனித வெள்ளி வார நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் குணமடைய விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.