Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி விலகல்

சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி விலகல்

By: Nagaraj Wed, 01 July 2020 9:43:44 PM

சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி விலகல்

சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவின் 59 ஆப்களை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி. கடந்த மாதம் 15 ம் தேதி லடாக்கின் கல்வான் பகுதியில்சீன படைக்கும் நமது ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனிடையே இந்தியாவில் சீன பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சுமார் 59 சீன 'ஆப்'களை இந்திய அரசு தடை செய்தது. மேலும் பிரதமர் மோடி கடந்தகாலங்களில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் வெப் தலமான வெய்போவில் தனது கணக்கை துவங்கியிருந்தார்.

pm modi,weibo,quit,china,posts ,பிரதமர் மோடி, வெய்போ, விலகினார், சீனா, பதிவுகள்

கல்வான் பிரச்னையில் இந்திய அரசின் மீதான வெறுப்புணர்ச்சி காரணமாக பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கைகள் போன்றவற்றை சீனாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் இருட்டடிப்பு செய்தன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியும் சீனாவின் வெப் தலமான வெய்போவில் துவக்கி இருந்த கணக்கில் இருந்து விலகினார்.

பிரதமர் மோடியின் வெய்போ கணக்கில் 115 பதிவுகள் இருந்தன. அதில் 113 பதிவுகள் வரையில் நீக்கப்பட்டன. மேலும் சீன அதிபர் ஜிஜின்பிங்குடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இரண்டு மட்டும் இருப்பதால் அவை அகற்றுவது கடினம் என்பதால் அவை மட்டும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

Tags :
|
|
|