Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளாவிய உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பங்கேற்பு

உலகளாவிய உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பங்கேற்பு

By: Karunakaran Wed, 08 July 2020 10:47:56 AM

உலகளாவிய உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பங்கேற்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. இதனை சரிசெய்ய இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற பெயரில் 3 நாள் உலகளாவிய உச்சி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாடு நாளை தொடங்கவுள்ளது. 11-ந் தேதி இந்த மாநாடு நிறைவடையவுள்ளது.

இதில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.மேலும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப், உள்துறை மந்திரி பிரித்தி பட்டேல், சுகா தார மந்திரி மேத் ஹான்காக், சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் பேசவுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

pm modi,global summit,video footage,participation ,பிரதமர் மோடி, உலகளாவிய உச்சி மாநாடு, வீடியோ காட்சிகள், பங்கேற்பு

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் ‘இந்தியா இன்க்’ குழுமத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மனோஜ் லாத்வா இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து வெளியே வர உலகம் போராடி வருகிறது. இந்த தருணத்தில் இந்தியாவின் அபரிமிதமான திறன், தொழில் நுட்ப வலிமை, தலைமைத்துவத்துக்கான தேடல் ஆகியவை உலகளவில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில், இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், ரெயில்வே மற்றும் வர்த்தக மந்திரி பியூஸ் கோயல், சிவில் விமானம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மந்திரி ஹர்தீப்சிங் பூரி, தகவல் தொழில் நுட்ப மந்திரி ரவிசங் கர் பிரசாத், திறன் மேம்பாட்டு மந்திரி மகேந்திரநாத் பாண்டே மற்றும் இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் குணால் நய்யார், ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளர் பர்கா தத், வாழும் கலை நிறு வனர் ரவிசங்கர் போன்றோர் பங்கேற்கவுள்ளனர்.

Tags :