Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By: Karunakaran Tue, 21 July 2020 08:56:42 AM

போலார் பனிக்கரடிகள் இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அரிய வகை விலங்குகளில் ஒன்றான போலார் பனிக்கரடிகள், ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றன. இவைகள் மீன்கள் மற்றும் கடல் சீல்கள் ஆகியவற்றை முக்கிய உணவாக எடுத்து கொள்கின்றன. உலக அளவில் மொத்தமாக 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே பனிக்கரடி உள்ளது.

உலக அளவில் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் இவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருவதால், பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன.

polar bears,polar,extinct,2100 year ,துருவ கரடிகள், போலார், அழிவு, 2100 ஆண்டு

பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ள விலங்குகள் பட்டியலில் பனிக்கரடி முன்னிலையில் உள்ளது. பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருவதால் பனிக்கரடிகள் தங்கள் வாழ்விடங்களையும், உணவுகளையும் இழந்து வருகின்றன. இதனால் அவை மனிதர்கள் வாழும் இடங்களை நோக்கி இடம்பெயருக்கின்றன.

தற்போது, கனடாவின் டோரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் நிலை இப்படியே தொடர்ந்தால் ஆர்ட்டிக்க் பகுதியில் இருந்து உணவு, தங்குமிடத்திற்காக இடம்பெயர்தலை சந்தித்து வரும் போலார் பனிக்கரடி இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Tags :
|