Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷிசுனக்... அபராதம் விதித்த காவல்துறை

சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷிசுனக்... அபராதம் விதித்த காவல்துறை

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:52:01 PM

சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷிசுனக்... அபராதம் விதித்த காவல்துறை

பிரிட்டன்: பிரதமருக்கே அபராதம்... பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் (42) சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்து மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

பிரதமர் ரிஷி சுனக் கடந்த வியாழக்கிழமை அவர் வட மேற்கு இங்கிலாந்தில் கார் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரிட்டனில் 100க்கும் மேற்பட்ட நலத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக தனது அரசாங்கத்தின் புதிய லெவலிங்க் அப் பன்ட் அறிவிப்புகளை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிரதமரின் காணொளியை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதிர்ச்சியான ஒன்றை போலீசார் கவனித்தனர். பிரதமர் ரிஷி சுனக் காரின் பின் இருக்கையில் அமர்ந்து காணப்பட்டார், ஆனால் அவர் நாட்டின் விதிகளின்படி சீட் பெல்ட் அணியவில்லை. இது காணொளியில் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.

britain,police,prime minister,rishi sunak,seat belt, ,காவல்துறை, சீட் பெல்ட், பிரதமர், பிரிட்டன், ரிஷி சுனக்

இதையடுத்து, தனது செயலுக்கு பிரதமர் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், லங்காஷயர் காவல்துறை ரிஷி சுனக்கிற்கு £100 அபராதம் விதித்தது. இந்திய மதிப்பில் ரூ.10,032 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் விதிகளின்படி அபராதம் செலுத்தத் தவறினால் £500 நீதிமன்ற அபராதம் விதிக்கப்படலாம்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வீடியோ எடுக்கும் போது பிரதமர் சீட் பெல்ட்டை மட்டும் கழற்றியதாகவும், இது தவறு என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது.

2021ம் ஆண்டில் பிரிட்டனில் சாலை போக்குவரத்து இறப்புகளில் சுமார் 30 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணியவில்லை என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|