தக்காளி பெட்டிகளை திருடிய மர்மநபர்களை தேடும் போலீசார்
By: Nagaraj Sat, 29 July 2023 07:19:30 AM
கடலூர்: இனிமே இவங்களையும் தேடணும்... திட்டக்குடி காய்கறி மார்க்கெட்டில் 6 தக்காளி பெட்டிகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் பார்வதி மற்றும் ராமன் ஆகியோர் காய்கறி கடை வைத்துள்ளனர்.
வழக்கம் போல் வியாபாரம் முடிந்த தும் கடையை பூட்டிக் கொண்டு வீடு சென்ற அவர்கள் மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பார்வதி கடையில் இருந்து 2 பெட்டி தக்காளியும் ராமன் கடையில் இருந்த 4 பெட்டி தக்காளியும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளி பெட்டி திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.