Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி விடுதலை

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி விடுதலை

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:31:53 PM

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி விடுதலை

அமெரிக்காவின் மினிசபோலி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த மே மாதம் 25 கள்ளரூபாய் நோட்டை மாற்ற முயற்சி நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். விரைந்து சென்ற 4 போலீசார் சோதனை நடத்த வந்தபோது, சந்தேகத்தின் பெயரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசாஸ் கைது செய்ய முற்பட்டனர்.

ஜார்ஜ் பிளாய்ட் கைதிற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால், டேரிக் ஸ்யவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலை வத்து நெரித்தார். டெரிக் ஸ்யவின் தொடர்ந்து 8 நிமிடங்கள் 48 வினாடிகள் ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை தனது முழங்காலால் நெரித்தார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

police officer,release,george floyd,america ,போலீஸ் அதிகாரி, விடுதலை, ஜார்ஜ் ஃபிலாய்ட், அமெரிக்கா

ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தை போலீஸ் முழங்காலால் நெரிப்பதும் அதனால் அவர் உயிரிழப்பதும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டும் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம் தொடர்பாக 4 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யபட்டு, அதில், டெரிக் ஸ்யவின் கைது செய்யப்பட்ட போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் தனது முழங்காலால் நெரித்தவரும் பிளாய்ட்டின் மரணத்திற்கு முக்கிய காரணமானவருமான டெரிக் ஸ்யவினுக்கு மினிசபோலி நகர நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, டெரிக் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். டெரிக் 1 மில்லியன் டாலரை பிணைத்தொகையாக கட்டியதையடுத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Tags :