Advertisement

ஹைதராபாத் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு

By: Nagaraj Sat, 01 Apr 2023 7:04:43 PM

ஹைதராபாத் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு

புதுடெல்லி: ராம நவமி கொண்டாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஹைதராபாத் கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153-ஏ (மதம், ஜாதி, பிறப்பு, குடியுரிமை அல்லது மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களிடையே வெறுப்பைத் தூண்டுதல்) மற்றும் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராஜா சிங் நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார்.

action,prosecution,mla,ramnavami,defense,complaint ,நடவடிக்கை, வழக்குப்பதிவு, எம்எல்ஏ, ராமநவமி, பாதுகாப்பு, புகார்

இதையடுத்து, மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசிய பாஜக எம்எல்ஏ ராஜாசிங்கை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக பாஜக மேலிடத்தினர் அறிவித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தனது கருத்துகளால் சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

அதன்பேரில், சமீபத்தில் எஸ்.ஏ.பஜாரில் ராம நவமி விழாவின் போது பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட அப்சல்கஞ்ச் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெ.வீரபாபு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் வீரபாபு கூறுகையில், “”பேரணியில் பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜா சிங் பேசிய அனைத்தையும், காவலர் கீர்த்திகுமார் பதிவு செய்துள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை கோரப்பட்டுள்ளது,” என்றார்.

Tags :
|
|