Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் அரசியலா... கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள்

மீண்டும் அரசியலா... கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள்

By: Nagaraj Mon, 05 Sept 2022 07:42:56 AM

மீண்டும் அரசியலா... கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள்

கொழும்பு: கடும் எதிர்ப்பு... நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிபரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் குழுவிடம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு யோசனை முன்வைத்துள்ளது.

opposition,rajapakse,did not go to welcome,members of parliament,no one ,எதிர்ப்பு, ராஜபக்சே, வரவேற்க செல்லவில்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாரும் இல்லை

எனினும் அதற்கு மகிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே செய்ய வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ச அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :