Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியீடு

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியீடு

By: vaithegi Tue, 11 Oct 2022 2:52:47 PM

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம்  வெளியீடு

சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையடுத்து தீபாவளி பண்டிகையை பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் கொண்டாடுவதற்கு மற்றும் பட்டாசு வெடிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் காற்று அதிகளவு மாசுபடாமல் இருக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின் வருமாறு:- குறைந்த ஒலியுடனும் (சத்தம்) குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

pollution control board,pollution control board , மாசு கட்டுப்பாடு வாரியம்  , மாசு கட்டுப்பாடு வாரியம்

இதனை அடுத்து இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :