ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கும் பொங்கல் உதவி பணத்தை கொடுக்க வேண்டும்
By: Nagaraj Tue, 20 Dec 2022 12:00:07 PM
சென்னை: ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கும் பொங்கல் உதவி பணத்தை கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது.
இந்த நிலையில் 2023ம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு
செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000
வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்
நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன்பின், வங்கிக்
கணக்கு உடன் ஆதாரை இணைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000
வழங்கப்படாது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்கா
விட்டாலும், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுக்க வேண்டும்
என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.