Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பண்டிகை... சென்னையே காலி; சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்

பொங்கல் பண்டிகை... சென்னையே காலி; சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்

By: Nagaraj Sun, 15 Jan 2023 10:55:40 AM

பொங்கல் பண்டிகை... சென்னையே காலி; சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தீபாவளி, கிறிஸ்துமஸ் என்றால் எங்கே வேண்டுமென்றால் கொண்டாடலாம். ஆனால், பொங்கல் என்றால் ஊரில்தான் கொண்டாட வேண்டும் என்று சென்னைமக்கள் முடிவோடு இருக்கிறார்கள்.

கோயம்பேடு - வண்டலூர் சாலையில் பேருந்துகள் எறும்பு போல் ஊர்ந்து சென்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வண்டலூர் சிறப்பு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்றுப் பாதையில் அனுப்பப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது

முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் நிரம்பி விட்டன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை அறிவித்தது. அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அடுத்து வரும் ஒரு வாரங்களுக்கு ரயில்களில் ஊருக்குப் போய்வர டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை.

pongal,chennai galli,celebration,cars,train,plane,bus ,பொங்கல், சென்னை காலி, கொண்டாட்டம், கார்கள், ரயில், விமானம், பஸ்

பொங்கல் விடுமுறைக்காக சென்னை விமானநிலையத்தில் சிறப்பு விமான சேவை எப்போதும் உண்டு. மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனாலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்.

சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 3 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், கோவைக்கு 6 விமானங்களும் இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள், உள்நாட்டு விமான ஏஜென்ஸியைச் சேர்ந்தவர்கள்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட, தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் போல் வடமாநிலங்களுக்கு செல்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். குறிப்பாக பெங்களூர், மும்பை, புனேவில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து கிளம்பிக் செல்பவர்களும் உண்டு.

பேருந்து, ரயில், விமானங்களை விட தனி கார்களில் கூட்டமாக பயணம் செய்பவர்கள்தான் அதிகம். போக்குவரத்து நெரிசல் இன்றி உளுந்தூர் பேட்டையை தாண்டிவிட்டால், நிஜமான பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.

Tags :
|
|
|
|