Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்

தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்

By: vaithegi Mon, 09 Jan 2023 10:40:33 AM

தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்


சென்னை: இன்று முதல் விநியோகம் .... வருகிற 15 ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையொட்டி 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது.

மேலும் அத்துடன் பொங்கல் பரிசாக முழு கரும்பும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடை இல்லாமல் பொங்கல் பரிசு தொகையை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெருத்தெருவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

pongal gift,family card holders ,பொங்கல் பரிசு,குடும்ப அட்டைதாரர்கள்


இதையடுத்து இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக பொதுமக்கள் 20 பேருக்கு கரும்பு ,1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ரூபாய் 1000 ரொக்க பணத்தை அவர் வழங்குகிறார்.

சென்னையில் முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததும் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகப்பு விநியோகம் தொடங்கும். அந்தந்த பகுதி எம்பி எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க உள்ளனர். டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுக்கு வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள் 13ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :