Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்: இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்: இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

By: Monisha Mon, 21 Dec 2020 2:59:25 PM

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம்: இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ. 2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

pongal gift,plan,family card,government,launch ,பொங்கல் பரிசு,திட்டம்,குடும்ப அட்டை,அரசாணை,துவக்கம்

இந்த நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Tags :
|