Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பரிசு அறிவிப்பு தேர்தலுக்கான லஞ்சம்; கம்யூ., முத்தரசன் விமர்சனம்

பொங்கல் பரிசு அறிவிப்பு தேர்தலுக்கான லஞ்சம்; கம்யூ., முத்தரசன் விமர்சனம்

By: Nagaraj Sun, 20 Dec 2020 3:11:03 PM

பொங்கல் பரிசு அறிவிப்பு தேர்தலுக்கான லஞ்சம்; கம்யூ., முத்தரசன் விமர்சனம்

தேர்தலுக்கான லஞ்சம்... பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தேர்தலுக்கான லஞ்சம் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மக்களின் வரிப் பணத்தை எடுத்து தேர்தலுக்கான லஞ்சமாக வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் பொங்கல் பரிசு மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

mutharasan,criticism,election bribery,pongal prize ,முத்தரசன், விமர்சனம், தேர்தல் லஞ்சம், பொங்கல் பரிசு

அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் எதிர்கட்சித் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுகின்றன. அதே போல தான், பொங்கல் பரிசு அறிவுப்புக்கும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை உயர்த்தி, ரூ.2500 வழங்குவேன் என்றும் ஒரு துண்டு கரும்புக்கு பதில் ஒரு முழு கரும்பை வழங்குவேன் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போது அரசு பணம் கொடுக்கவில்லை என விமர்சித்த ஸ்டாலின், பொங்கல் பரிசை ரூ.5000 ஆக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், முதல்வர் தேர்தலுக்கான லஞ்சத்தை வழங்குவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :