Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

நைஜர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 21 Aug 2023 07:16:51 AM

நைஜர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

வாடிகன்: நைஜர் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கடந்த ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் அதிபர் பசோம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அதிபர் பசோம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

pope francis,insisting on a peaceful solution to the niger issue ,போப் பிரான்சிஸ், வலியுறுத்தல், அமைதியான தீர்வு, நைஜர் பிரச்சினை

நைஜரில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்ததாக அந்நாட்டு ராணுவம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தது. ராணுவத்தின் இந்தச் செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே, நைஜரின் புதிய ராணுவ ஆட்சிக்கும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுக்கள் சிறிதளவு முன்னேற்றத்தை அளித்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார். மேலும், அனைவரின் நலனுக்காகவும் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags :