Advertisement

போப் பிரான்சை சந்தித்த ஒடிசா முதல்வர்

By: Nagaraj Thu, 23 June 2022 05:10:17 AM

போப் பிரான்சை சந்தித்த ஒடிசா முதல்வர்

வாடிகன்: போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு... இத்தாலி சென்றுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், போப் பிரான்சிஸை சந்தித்தார்.

ஒடிசாவின் பிஜூ ஜனதா தள கட்சி முதல்வர் நவீன் பட்நாயக் 10 நாட்கள் வெளிநாட்டு பயணமாக கடந்த 20ம் தேதி இத்தாலி, மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளுக்கு சென்றுள்ளார். அவருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் சென்றுள்ளனர்.நேற்று இத்தாலி சென்றடைந்த நவீன் பட்நாயக், வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்தார்.

odisha,chief minister,italy,travel,pope,meeting ,ஒடிசா, முதல்வர், இத்தாலி, பயணம், போப், சந்திப்பு

பின்னர் உலக உணவு திட்டம் அமைப்பின் அழைப்பின் பேரில் ரோம் நகரில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் ஒடிசாவின் உணவு பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக உரையாற்ற உள்ளார்.


பின்னர் ஜூன் 29 அன்று துபாய் செல்லும் பட்நாயக் ஒடிசாவில் முதலீடு செய்ய வாய்ப்புகள் குறித்து மத்திய கிழக்கு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி திட்டமிட்டுள்ளார். ஜூலை 2 ஆம் தேதி ஒடிசா சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், ஜூன் 30 ம் தேதி ஒடிசா திரும்புவார் எனமுதல்வர் அலுவலக செய்தி தொடர்பாக தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|
|