Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது

நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது

By: Nagaraj Thu, 16 Mar 2023 10:55:17 PM

நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது

ஜப்பான்: எம்.பி. பதவி பறிப்பு... ஜப்பானில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்காத பிரபல யூடியூபரின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

பிரபலங்கள் குறித்து கிசுகிசுக்களை டுவீட் செய்வதன் மூலம் பிரபலமான யோஷிகாசு (Yoshikazu ), கடந்தாண்டு மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

impeachment,speaker,salary,parliament event,dubai,yoshikazu ,பதவி பறிப்பு, சபாநாயகர், சம்பளம், நாடாளுமன்ற நிகழ்வு, துபாய், யோஷிகாசு

துபாயில் வசித்துவந்த யோஷிகாசு ( Yoshikazu ), ஒரு முறை கூட நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்காமல் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

இது குறித்து விசாரிக்க அழைத்தபோது, துருக்கியில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட யோஷிகாசு ( Yoshikazu ), மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார். சபாநாயகர் அதனை ஏற்காததால், அவரது பதவி பறிக்கப்பட்டது.

Tags :
|
|