Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு தொடங்கியது

By: Nagaraj Tue, 14 July 2020 10:52:39 AM

இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. இதை ஒட்டி தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் தபால் வாக்குபதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு, தொடங்கியது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற இருந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தல், 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் அதற்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.

parliamentary election,postal vote,5 days,start ,நாடாளுமன்ற தேர்தல், தபால் ஓட்டு, 5 நாட்கள், தொடக்கம்

இதில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று தேர்தல் பணியாற்ற உள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வாக்களித்து வருகின்றனர். இந்த தபால் வாக்குபதிவு 2 கட்டமாக 5 நாட்கள் நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225 ஆகும், மொத்தமாக ஒரு கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

Tags :
|