Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப்போட அரசு தீவிரமாக ஆலோசனை?

பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப்போட அரசு தீவிரமாக ஆலோசனை?

By: Monisha Tue, 10 Nov 2020 11:00:11 AM

பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப்போட அரசு தீவிரமாக ஆலோசனை?

மத்திய அரசு பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்ததைத்தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

school,college,tamil nadu,government,counseling ,பள்ளி, கல்லூரி,தமிழ்நாடு,அரசு,ஆலோசனை

இதுதொடர்பாக பள்ளிகளில் பெற்றோரிடம் நேற்று கருத்துகளும் கேட்கப்பட்டன. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமல்லாது, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போட தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை முதல்-அமைச்சரின் 3 மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|