Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு

By: vaithegi Tue, 14 Nov 2023 10:37:04 AM

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் ஒத்திவைப்பு


சென்னை: தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு ... தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையடுத்து கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், அரியலூர் ,திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

degree examinations,polytechnic college ,பட்டயத் தேர்வுகள் , பாலிடெக்னிக் கல்லூரி

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .

இதனை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட பட்டய தேர்வுகள் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :