Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் நாளை முதல் நடக்கவிருக்கும் தேர்வுகளை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு

இலங்கையில் நாளை முதல் நடக்கவிருக்கும் தேர்வுகளை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு

By: vaithegi Mon, 27 June 2022 8:35:56 PM

இலங்கையில் நாளை முதல் நடக்கவிருக்கும் தேர்வுகளை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு

இலங்கை: இலங்கையில் எரிபொருள் மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் பல மணி நேரமாக பெட்ரோல் நிலையங்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையே பல நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பெட்ரோல்-டீசல் போன்ற எரிபொருட்களின் விலை மட்டுமல்லாமல் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களிலிருந்து காய்கறிகளின் விலையும் மிக கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் சொந்தமாக காய்கறித் தோட்டத்தை உருவாக்கும்படி அரசு விழிப்புணர்வு வழங்கி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க பல நாடுகளிடம் இருந்து இலங்கை எரிபொருளை இறக்குமதியாக பெற உள்ளது.

exam,sri lanka ,தேர்வு,இலங்கை

எரிபொருள் உபயோகத்தை சிறிதளவு குறைப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் ஊழியர்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் அந்த நாளுக்குரிய எரிபொருள் தேவை குறையும் என்பதால் தான் அரசு இத்தகைய முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு குறைக்க நாளை முதல் நடக்கவிருந்த தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரியும் படி அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றிலிருந்து வரும் ஜூலை 1ஆம் தேதி வரை கொழும்பு மற்றும் இதர பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags :
|