Advertisement

செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

By: vaithegi Fri, 16 Dec 2022 2:26:19 PM

செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: மீண்டும் ஒத்திவைப்பு ..... தமிழகத்தில் கடந்த வாரம் வரை கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் அதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டது.

மேலும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 446 பொறியியல் கல்லூரிகளில் கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக அந்த தேர்வுகள் அந்நாட்களில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

postponement,semester exam ,ஒத்திவைப்பு , செமஸ்டர் தேர்வு

இதனை அடுத்து இந்த தேர்வுகள் நடத்த மற்றொரு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதன் படி, டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள், வரும் 24-ம் தேதியும், 10-ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் 31-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இத்தேதியையும் மாற்றி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே அதன்படி டிச. 24 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 19 ஆம் தேதியும், டிசம்பர் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :