Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் வியாழக்கிழமை (ஜூன் 23) மின்தடை என மின்வாரியம் அறிவிப்பு

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை (ஜூன் 23) மின்தடை என மின்வாரியம் அறிவிப்பு

By: vaithegi Wed, 22 June 2022 12:10:56 PM

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை (ஜூன் 23) மின்தடை என மின்வாரியம் அறிவிப்பு

புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில சமயங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. எந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறார்களோ அதன் விவரம் முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.

power board,maintenance works,insulation,leakage ,


மின்வாரியம்,பராமரிப்பு பணிகள் ,மின்தடை ,மின்கசிவு


இந்த பணிகளை மேற்கொள்ளும் போது மின்னணு சாதனங்களில் கோளாறு, மின்னணு துண்டிப்பு, மரக் கிளைகளை அகற்றுதல் மற்றும் மின்கசிவு ஆகியவை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க முடிகிறது. அதன்படி, தூத்துக்குடி அருகாமையில் உள்ள புதுக்கோட்டை மின்சாரம் பெரும் பகுதிகளான குலையன்கரிசல், போடம்மாள்புரம், திருமலையாபுரம், பேய்குளம் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் விநியோகப் பகுதியை சார்ந்த எல்லை நாயக்கன்பட்டி, ராமநாதபுரம் மற்றும் பத்மநாபமங்கலம் குவாரி ஆகிய பகுதிகள்.

மெலும், குளத்தூர் மின்சாரம் பெரும் பகுதிகளான வைப்பார் உப்பளம் பகுதியிலும், சாயர்புரம் மின் நிலையங்களுக்கு உட்பட்ட இருவப்பபுரம், சோலை புதூர் ஆகிய பகுதிகளிலும், பழையகாயல் மின் நிலையங்களுக்கு சார்ந்த கோவங்காடு உப்பளம் பகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் பத்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :