Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து

மதுரையில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து

By: vaithegi Wed, 22 June 2022 7:29:34 PM

மதுரையில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து


மதுரை: தமிழகத்தில் நாள்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு பிரச்சனை காரணமாக எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரையில் சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணை மின்நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை உள்ளிட்ட அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால், துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறும் பகுதிகளான டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு, காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி உள்ளிட்ட இடங்களில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

power supply,electricity,maintenance work ,மின் விநியோகம்,மின்சாரம் ,பராமரிப்பு பணிகள்

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கூடல்மலைத் தெரு, பாம்பன் நகர், கிரீன் நகர், திருமலையூர், என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதி தெரு..

அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூன் 23) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :