Advertisement

மின்கம்பங்கள் மாற்றம் செய்யும் பணியால் மின்தடை

By: Nagaraj Sat, 03 June 2023 09:06:54 AM

மின்கம்பங்கள் மாற்றம் செய்யும் பணியால் மின்தடை

தஞ்சாவூர்: தஞ்சையில் மின்கம்பங்கள் மாற்றம் செய்யும் பணியால் இன்று ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

power outage,today,road widening,poles,shifting work ,மின்தடை, இன்று, சாலை விரிவாக்கம், மின்கம்பங்கள், மாற்றும் பணி

தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

எனவே வி.பி.கார்டன், எலிசா நகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|