Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட பகுதிகளில் நாளை மின்தடை

By: vaithegi Wed, 07 Sept 2022 4:26:42 PM

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்து கொண்டு வருகிறது.

இதை அடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை அறிவிக்கப்படுகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால் அதிகளவில் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.

power outage,madurai ,மின்தடை,மதுரை

மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, சின்ன இலந்தைகுளம், குட்டிமேய்க்கிப்பட்டி

மேலும் எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ச. ஆறுமுகராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :