Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை

By: vaithegi Wed, 12 Oct 2022 4:24:34 PM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை

காஞ்சிபுரம் : மின்விநியோகம் .... நாளை (அக். 13) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. நாளை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விபத்துக்கள், மின்சார பழுதுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அது குறித்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட மின்சார செயற்பொறியாளர் பிரசாந் வெளியிட்டுள்ளார்.

kanchipuram,power outage ,காஞ்சிபுரம் ,மின்தடை

எனவே அதன் படி வாலாஜாபாத், புத்தகரம், தேவரியம்பாக்கம், வாரணவாசி, ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தென்னேரி, சங்கராபுரம், கட்டவாக்கம், தொள்ளாழி, களியனூர், புளியம்பாக்கம், தம்மனூர், அவளுர், வரதராஜபுரம், அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், பூசிவாக்கம், வெங்குடி ஆகிய பகுதிகளிலும்

மேலும் ஒட்டிவாக்கம், கருக்குப்பேட்டை , தாங்கி, ஏகனாம்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மின்தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :