Advertisement

கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை

By: vaithegi Wed, 29 June 2022 8:27:41 PM

கோவையில் நாளை (ஜூன் 30) மின்தடை

கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் அனைத்தும் மாதந்தோறும் பராமரிப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை கோவையில் உள்ள சோமையம்பாளையம், தொண்டாமுத்தூர், சீரநாயக்கன்பாளையம், தேவராயபுரம், டாட்டா பாத் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் மின்சாரம் பெறும் பகுதிகளான கோகுலம் காலனி, ராதிகா அவன்யூ, நியூ தில்லை நகர், EB காலனி, காந்திநகர், செல்வவிநாயகர் நகர், கண்ணதாசன் வீதி, விவேகானந்தர் வீதி, சங்கிலி கோனார் தோட்டம், சுண்ட பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 30) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான குரியோ கார்டன், மாதவன் நகர், அருண் நகர், டாட்டா நகர், சின்மயா நகர், கே எம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

insulation,maintenance work ,மின்தடை,பராமரிப்பு பணிகள்

மேலும், தொண்டாமுத்தூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான தாளியூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் சிலமனூர், பிஜி புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாட்டா பாத் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு பகுதி, நாராயண குரு ரோடு, சாய்பாபா கோவில், மனை இயல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், கே கே புதூர் வீதி 1 முதல் 8 வரை பாரதி பார்க்| ஒன்னு ரெண்டு பாரதி பார்க் கிராஸ், ஒன்னு ரெண்டு மூணு ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பா கவுண்டர் சாலை, சி எஸ் டபிள்யூ மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான ரங்கே கவுண்டர் சாலை, சுக்குவார்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியர் மாளிகை, விமானப்படை கல்லூரி, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதியில், டாடாபாத், அழகப்ப செட்டியார், சாலை 100 அடி சாலை, சிவானந்த காலனி, ஹெட்கோ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஜூன் 30) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

Tags :