Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மின்தடை

By: vaithegi Mon, 27 June 2022 8:36:07 PM

சிவகங்கை மாவட்டத்தில்  நாளை மின்தடை

சிவகங்கை : மின்கம்பங்களில் ஏதேனும் கோளாறு, மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளதா என்பதனை மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னனு சாதனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்படுகிறது. மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

insulation,maintenance work ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

சிவகங்கை நகரில் மின்தடை அறிவிக்கப்படவுள்ள பகுதிகள் இதோ, ஓவா்சியா் பிள்ளை தெரு, காவலா் குடியிருப்பு, பிள்ளையாா்கோயில் தெரு, காந்தி வீதியில் ராமச்சந்திரா பூங்கா முதல் கேசவன் மளிகை கடை வரை, காமராஜா் காலனி, எஸ்.பி. பங்களா, முத்துப்பட்டி

மேலும், பொன்னாகுளம், மானகுடி, பனையூா், பையூா், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டாம், தென்றல் நகா், மதுரை சாலை, பிஎஸ்ஆா் நகா், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சாமியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :