Advertisement

சிவகாசியில் நாளை (ஜூலை 14) மின்தடை

By: vaithegi Wed, 13 July 2022 11:50:57 AM

சிவகாசியில் நாளை (ஜூலை 14) மின்தடை

சிவகாசி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மின் நிலையங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டு இருக்கிறதா என்பதை மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் பராமரிப்பு பணிகளை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட ஒரு சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும், தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

power outage,sivakasi ,மின்தடை,சிவகாசி

அதன்படி , தற்போது சிவகாசி கோட்டத்திற்கு உட்பட்ட அப்பையநாயக்கன்பட்டி,நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான புதுப்பட்டி, நல்லன் செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி.

மேலும் கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி, சிந்துவம்பட்டி, எம்.நாகலாபுரம்,சிறு குளம், வீரர் பட்டி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை ஜூலை 14ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரி பாவநாசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :