Advertisement

தென்காசியில் ஜூலை 2ம் தேதி மின்தடை

By: vaithegi Thu, 30 June 2022 11:23:40 AM

தென்காசியில்  ஜூலை 2ம் தேதி மின்தடை


தென்காசி : தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான கொக்கிரகுளம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகின்றன.

கல்லிடைக்குறிச்சி கோட்டகத்திக்கு உட்பட்ட ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், இளங்கோ நகர், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, சுப்பிரமணியபுரம் மற்றும் பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.

மேலும், கீழக்குத்தப்பாஞ்சான், அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை,

electrical resistance,power supply ,மின்தடை ,மின் விநியோகம்


அதைதொடர்ந்து அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

வள்ளியூர் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தெற்கு வள்ளியூர், வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வினியோக செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :