Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By: vaithegi Sun, 28 May 2023 4:26:40 PM

ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் : டெல்லி,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அதிர்வு .... ஆப்கானிஸ்தானின் பைசாபாத்திலிருந்து தென்கிழக்கே 70 கி.மீ தொலைவில் காலை 11.19 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கமானது பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

earthquake,afghanistan ,நிலநடுக்கம்,ஆப்கானிஸ்தான்

மேலும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், இஸ்லாமாபாத், பெஷாவர், ஸ்வாட், ஹரிபூர், மலகண்ட், அபோதாபாத், பத்கிராம், காஷ்மீர் (பாகிஸ்தான்), டெக்ஸ்லியா, பிண்ட் தாதன் கான் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைப் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 220 கிமீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இதனால் உயிரிழப்புகள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளதா.? என்ற தகவல் இதுவரை எதுவும் தெரியவில்லை.

Tags :