Advertisement

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By: vaithegi Mon, 05 Sept 2022 8:00:09 PM

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனா: சீனாவில் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந் நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனால், பல பகுதிகளில் நில சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நில சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

earthquake,china ,நிலநடுக்கம் ,சீனா

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலநடுக்கத்திற்கு பின் அருகேயுள்ள பல பகுதிகளில் தொடர் அதிர்வுகளும் உணரப்பட்டு உள்ளன. இதை அடுத்து பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

மேலும் பலர் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு ஓடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 16 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தகவல் தெரிவித்து உள்ளது. செங்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் லூடிங் கவுன்டியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Tags :