Advertisement

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By: vaithegi Fri, 24 Feb 2023 09:47:19 AM

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா: கடந்த சில நாட்களாக பல நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தோனேஷியாவிலும் நிலநடுக்கம் ... பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் பல கண்ட திட்டுகள் மீது அமைந்துள்ளன. இந்த கண்டத்திட்டுகள் (புவி தகடுகள்) மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கின்றன. 2 கண்ட திட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகின்றது.

இதையடுத்து சமீபமாக துருக்கி, சிரியா பகுதியில் இவ்வாறாக கண்டத்திட்டுகள் நகர்ந்ததால் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதியில் தொடர்ந்து 5 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இந்தோனேஷியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

earthquake,indonesia ,நிலநடுக்கம் ,இந்தோனேசியா

இந்த நிலையில் இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

மேலும் வடக்கு வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான முதல் மிதமான நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய ஆரம்ப தகவல்கள் எதுவும் இல்லை. அதேபோன்று, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Tags :