கியூபெக் விபத்தில் காணாமல் போனவர்களுக்க பிரார்த்தனைகள்
By: Nagaraj Tue, 17 Jan 2023 3:50:05 PM
கனடா: கியூபெக் விபத்தில் காணாமல் போனவர்களுக்காக பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில் கியூபெக்கின் மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். ப்ரோபேன் எரிவாயு கைத்தொழிற்சாலையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
உள்ளுர் தேவாலயமொன்றில் இந்த காணாமல் போன பணியாளர்களுக்காக ஆராதனைகள்
நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு ஆராதனைகளில்
பங்குபற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெடிப்புச் சம்பவத்தில்
இரண்டு பணியாளர்களும் ஒரு துணை ஒப்பந்தகாரரும் காணாமல் போயுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.