Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் மழலையர் பள்ளிகளில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சீனாவில் மழலையர் பள்ளிகளில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By: Nagaraj Tue, 26 May 2020 7:38:25 PM

சீனாவில் மழலையர் பள்ளிகளில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா பிரச்னைகளுக்கு மத்தியில் தற்போது சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மழலை குழந்தைகள் எப்படி பள்ளிக்குள் வருகிறார்கள் என்பதை பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் 55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.5லட்சம் உயிரிழந்துள்ளனர்.

schoolchildren,precaution,action,china ,பள்ளிக்குழந்தை, முன்னெச்சரிக்கை, நடவடிக்கை, சீனா

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்தள்ளனர். உலகமே கொரோனாவில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்து வருகிறது. ஆனால் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா அதில் இருந்து வெளியே வந்து வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டது.

பேருந்துகள், ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டுவிட்டது. மழலையர் பள்ளிகளையும் சீனா திறந்துவிட்டது. ஆனால் சீனா கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இன்று வரையிலும் கைவிடவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் மக்களை வழி நடத்தி வருகிறது.

அதில் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தாய் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறுவன் தான் அணிந்து இருக்கும் மாஸ்கை வெளியில் உள்ள குப்பை தொட்டியில் போடுகிறார். அதன்பிறகு ஒரு ஆசிரியர் உதவுகிறார். அதன்பிறகு கிருமி நாசினியால் குழந்தையின் துணி மற்றும் பை ஒரு சில வினாடிகள் சுத்தம் செய்யப்படுகிறது.

பின்னர் அந்த குழந்தை பள்ளிக்குள் செல்கிறான். இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது சீனா.

Tags :
|