Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 19ம் தேதி முதல் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா பிரச்சாரம்

வரும் 19ம் தேதி முதல் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா பிரச்சாரம்

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:11:49 PM

வரும் 19ம் தேதி முதல் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா பிரச்சாரம்

சென்னை: பிரேமலதா பிரச்சாரம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, பிரசாரம் மேற்கொள்வார் என, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘வரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தேமுதிக வேட்பாளர் எஸ்.ஐ.டி., ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிப்ரவரி, 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, சூறாவளி பிரசாரம் செய்து, பிரசஸ் சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க உள்ளானர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி முடிவடைந்தது.

by-election,campaign,premalatavijayakanth ,, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பிரச்சாரம், பிரேமலதா விஜயகாந்த்

காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர் 121 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசிநாளில் 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். மேலும் 7 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

Tags :