Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவு

500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவு

By: Nagaraj Sat, 01 Aug 2020 3:38:52 PM

500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அஷ்ரப் கானி  உத்தரவு

500 தலிபான் கைதிகளை விடுவிக்க உத்தரவு... நீண்ட கால தாமதமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் புதிய போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, 500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு தேசிய போர் நிறுத்தத்தைத் தூண்டியுள்ள ஈத் அல் ஆதா விடுமுறையின் போது, இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி கானி கூறியுள்ளார். தலிபான்கள், அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி 5,000 தலிபான் போராளிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை இது பிரதிபலிக்கின்றது.

500 taliban,liberation,afghanistan,president,order ,500 தலிபான்கள், விடுதலை, ஆப்கானிஸ்தான், ஜனாதிபதி, உத்தரவு

ஈத் உரையில் ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறுகையில், ‘நல்லெண்ணத்தைக் காட்டவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தவும், குழுவின் மூன்று நாள் போர்நிறுத்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக 500 தலிபான் கைதிகளை விடுவிப்போம்’ என கூறினார். இருப்பினும், விடுவிக்கப்படவுள்ள 500 கைதிகள், தலிபான்கள் கோரிய 5,000 பேரின் அசல் பட்டியலில் இல்லை என கூறப்படுகின்றது.

காபூல் அதிகாரிகள் ஏற்கனவே 4,600 கைதிகளை விடுவித்துள்ளனர். ஆனால் இறுதி 400 பேரை விடுதலை செய்ய அவர்கள் தயங்குகிறார்கள். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இதனிடையே ‘கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட அந்த 400 தலிபான் கைதிகளின் விடுதலையை முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை. ஆப்கானிய மூத்த தலைவர்கள் அவர்கள் குறித்து தீர்மானிப்பார்கள்’ என ஜனாதிபதி கானி கூறினார்.

இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. அதன் பிறகு ஆப்கானுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. அதன் பிறகான பல மோதல்களில் இதுவரை 2,400 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் இராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை டோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

Tags :