Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாதத்திற்கு பின் எகிப்தில் வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்கள் திறப்பு

5 மாதத்திற்கு பின் எகிப்தில் வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்கள் திறப்பு

By: Nagaraj Sun, 30 Aug 2020 5:58:11 PM

5 மாதத்திற்கு பின் எகிப்தில் வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்கள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட ஐந்து மாத இடைக்கால தடையை முடிவுக்கு கொண்டுவந்து, வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எகிப்து அரசு, சுகாதார அதிகாரிகள் விதித்த கடுமையான சுகாதார நடவடிக்கைகளை குறிப்பாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர் என அறிவித்துள்ளது.

egypt,mosques,action,corona,number ,எகிப்து, பள்ளிவாசல்கள், நடவடிக்கை, கொரோனா, எண்ணிக்கை

எகிப்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 5 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்திய வாரங்களில் எகிப்து அரசாங்கம் விமானச் சேவை உட்பட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

Tags :
|
|
|