Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கல்

நாடு முழுவதும் 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கல்

By: vaithegi Mon, 05 Sept 2022 11:03:35 AM

நாடு முழுவதும்  46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கல்

இந்தியா : இந்தியா முழுவதும் செப்டெம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக அரசு அனுசரித்து கொண்டாடி வருகிறது. எனவே இதன் காரணமாக நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதை அடுத்து தொடக்க நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5 ம் நாளான இன்று நல்லாசிரியர் விருது வழங்க ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 45 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

draupadi murmu,good writer award,teacher , திரௌபதி முர்மு,நல்லாசிரியர் விருது ,ஆசிரியர்

டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதை வழங்க இருக்கிறார்.

மேலும் இவ்விருதுக்காக நடப்பு ஆண்டில் இணையதளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற 3 கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்துள்ளது. இதை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


Tags :