Advertisement

ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்

By: vaithegi Sat, 17 Sept 2022 8:02:29 PM

ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார்

சென்னை: இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களது இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் பலர் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

dravupati murmu,london ,திரவுபதி முர்மு,லண்டன்

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இதையடுத்து இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார்.

Tags :