Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

By: Monisha Tue, 16 June 2020 10:18:16 AM

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

சீனாவின் உகான் நகரிலிருந்து கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 78,93,700 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,32,922 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொரோனா உச்சத்தை சந்தித்த பிரான்ஸ் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. பிரான்ஸில் தற்போது ஊரடங்கு நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் நேற்று (திங்கட்கிழமை) முதல் உணவு விடுதிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

france,corona virus,economy,curfew ,பிரான்ஸ்,கொரோனா வைரஸ்,பொருளாதாரம்,ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும் பொருளாதார இழப்பை பிரான்ஸ் சந்தித்தது. இந்நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள பிரான்ஸில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பிரான்ஸின் பலவீனம் மற்றும் குறைபாடுகளைக் காட்டியுள்ளது. நாம் மீண்டும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் இருக்க உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் 1,57,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,407 பேர் பலியாகி உள்ளனர்.

Tags :
|