Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமுர்த்தி நிவாரணம் குறித்து ஜனாபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை

சமுர்த்தி நிவாரணம் குறித்து ஜனாபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:54:08 AM

சமுர்த்தி நிவாரணம் குறித்து ஜனாபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை

ஜனாதிபதி பணிப்புரை... சமுர்த்தி நிவாரணத்தை நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும்.

president,workshop,samurdhi,investment,beneficiaries ,ஜனாதிபதி, பணிப்புரை, சமுர்த்தி, முதலீடு, பயனாளிகள்

அதனால் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் செலவிடப்படும் தொகை 50,000 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும். சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சுட்டிக் காட்டினார்.

Tags :