Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர்

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர்

By: Nagaraj Sun, 22 Jan 2023 11:23:21 AM

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் எகிப்து அதிபர்

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (68) கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை டெல்லியில் நடந்து வருகிறது. இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (68) கலந்து கொள்கிறார். இந்தியாவின் குடியரசு தின விழாவிற்கு எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை. குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படையும் பங்கேற்கிறது.

இந்நிலையில் எகிப்து அதிபர் அல் சிசி 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். 25ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அன்று மாலை, ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு விருந்து அளித்து கௌரவிக்கிறார்.

Tags :