Advertisement

முன்னாள் போர் தளபதிகளை அழைத்து வந்த உக்ரைன் அதிபர்

By: Nagaraj Sun, 09 July 2023 5:55:50 PM

முன்னாள் போர் தளபதிகளை அழைத்து வந்த உக்ரைன் அதிபர்

துருக்கி: துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார். இதையடுத்து உக்ரைன் அதிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்தாண்டு மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிய போது, அங்கு போரிட்ட வீரர்களும் போர் தளபதிகளும் சரணடைந்தனர்.
துருக்கி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் சிலரை விடுவித்த ரஷ்யா, போர் முடியும் வரை, போர் தளபதிகள் துருக்கியில் இருக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், துருக்கிக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய, ஜெலென்ஸ்கி, தளபதிகளுடன் நாடு திரும்பினார். உக்ரைனின் லிவிவ் நகரில் வீரர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அங்கு பேசிய ஜெலென்ஸ்கி, அவர்களை நாட்டின் ஹீரோக்கள் என்று பாராட்டினார். இதையடுத்து அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

war commanders,turkey,negotiations,brought,president ,போர் தளபதிகள், துருக்கி, பேச்சுவார்த்தை, அழைத்து வந்தார், அதிபர்


Tags :
|