- வீடு›
- செய்திகள்›
- தன்னை பார்க்க முடியாமல் அழுத சிறுமியை மாளிகைக்கு வரசெய்து விருந்து கொடுத்த அதிபர் புதின்
தன்னை பார்க்க முடியாமல் அழுத சிறுமியை மாளிகைக்கு வரசெய்து விருந்து கொடுத்த அதிபர் புதின்
By: Nagaraj Thu, 06 July 2023 11:54:54 PM
ரஷ்யா: சிறுமிக்கு விருந்து... ரஷ்ய அதிபர் புதினை காண முடியாமல் கதறி அழுத சிறுமியை, அதிபர் மாளிகைக்கு வரவழைத்து புதின் விருந்தளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய கட்டுப்பாடில் உள்ள (Dagestan) தாகெஸ்தான் குடியரசுக்கு அதிபர் புதின் சுற்றுப்பயணம் சென்றார்.
அப்போது, அவரை பார்க்க 8 வயது சிறுமி (Raisat Akipova) ரைசாட் அகிபோவா காத்திருந்தார். கூட்டத்தில் புதினை சந்திக்க முடி யாமல் போனதால் ரைசாட் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதைக்கண்டு உடனடியாக சிறுமியை அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு புதின் நேரில் வரவழைத்தார்.
விழி நிறைய ஆச்சரியமும், முகத்தில் புன்னகையுடனும் புதினைக் கண்டு ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்ட ரைசாட் கன்னத்தில் பாசத்துடன் முத்தம் தந்து பூங்கொத்து கொடுத்து புதின் வரவேற்றார்.
சிறுமியின் கைகளைப் பிடித்து தன் இருக்கைக்கு அழைத்துச் சென்ற புதின், ரைசாட்-ஐ அதில் அமர வைத்தார்.