Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கான கோப்புகளில் அதிபர் புடின் கையெழுத்து

ரஷ்யப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கான கோப்புகளில் அதிபர் புடின் கையெழுத்து

By: Nagaraj Thu, 22 Sept 2022 07:56:43 AM

ரஷ்யப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கான கோப்புகளில் அதிபர் புடின் கையெழுத்து

ரஷ்யா: ரஷ்யப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கான கோப்புகளில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரில் தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்களை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் மற்றும் இதர பகுதிகளில் இருக்கும் ரஷ்யப் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கான கோப்புகளில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

border,we prepare,ukraine,again,forces,signature ,எல்லை, நாங்கள் தயார், உக்ரைன், மீண்டும், படைகள், கையெழுத்து

அதில் ரஷ்ய அதிபர் புடின் ராணுவத்தை ஒன்று சேர்ப்பதற்கான அறிவிப்பை தெரிவித்ததோடு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தவும், அழிக்கவும் முடிவு செய்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யா வீரர்கள் அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்க ஆதரவு வழங்கப்படும் என்றும், ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|